விலகி விலகிச் சென்றாலும்
விரட்டிக்கொள்ளும் பார்வை உனது ..
பழகியவர்கள் பரிகசித்தாலும் அதை
மறைக்கும் புன்னகை உனது..
உலகையே உலவினாலும் உன் நினைவு
உண்டென்கிறது என் மனது ..
உன் விழிகளைக் கண்டாலே
என் நரம்பெல்லாம் மின்சாரம் ..
உனை நினைத்து உருகியே
போகிறது என் நேரம்..
நீ பேசிய வார்தைகள்
என் செவிகளுக்குள் ரீங்காரம்
எப்போது நீ தருவாய் உனக்குள்
ஒருவனை எனக்கோர் அங்கீகாரம்.
உன் பேரைச்சொல்ல சொல்ல
என் மனம் பறக்குது மேல
இத உனக்கு நான் சொல்ல
என்னருகில் நீ இல்ல
கனவிலும் கண்ணிலும் மட்டுமல்ல
என் நினைவெல்லாம் நீதான் புள்ள
உன்ன நான் பார்த்தது என் தப்பில்ல
இது ஆண்டவன் கட்டளை
வியாழன், 20 ஆகஸ்ட், 2009
புதன், 29 ஏப்ரல், 2009
எங்கே நீ
எங்கேயடி நீ ?
வாரம் ஒன்றும் ஓடி போனது உன் வான் மிதக்கும் கண்களைக் கண்டு
நேரம் போனது தெரியாமல் உனை நினைத்து உருகும் உள்ளம் இங்கு உண்டு
பூவைச் சுற்றிப் பறக்கத்தான் வண்டு -உன் போல்
பூவையரைச் சுற்றிப் பறக்கவே நானும் உண்டு..
எங்கே எங்கே நீ எங்கே .. ?

ஞாயிறு, 19 ஏப்ரல், 2009
நானும் ஒருவன்
நான் யார் என்று ஒவ்வொருவனும் கேட்கும் பொழுது கிடைக்கும் பதிலில் சில ...
பொய்யை பொய்யாக
மெய் போல காட்டும் மனிதர்களின் மத்தியில்,
நானும் ஒருவன்..
மனிதம் இன்னும் உள்ளதென
மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மாந்தர்களில்
நானும் ஒருவன்..
முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னாள்
தோன்றிய மூத்த குடியில் பிறந்தவன் என்று
மார் தட்டி கொள்ளும் மைந்தர்களில்
நானும் ஒருவன்..
கனவுகளை கனவாகவே கை விட்டு
கடமைக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் கல் நெஞ்சக்காரர்களில்
நானும் ஒருவன் ..
இயற்கைசீற்றங்களால் அழிந்து போன லெமூரியா கண்டம் போல நம்
இயல் இசை நாடகத் தமிழ் கண்டம் ஆகிடுமோ என்று கலங்கும் காளைகளில் நானும் ஒருவன்..

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)